Tamil Song - 53 - Yesuvey Unthan Maasilla
இயேசுவே
உந்தன் மாசில்லா இரத்தம்
எந்தனுக்காக
சிந்தினீரே
கோரப்பாடுகள்
யாவும் சகித்தீர்
அத்தனையும் எனக்காகவோ
மாபாவியாம்
என்னை நினைக்க
மண்ணான
நான் எம்மாத்திரம் ஐயா
தேவ
தூதரிலும் மகிபனாய்
என்னை
மாற்றின அன்பை துதிப்பேன்
1.என்மேல்
பாராட்டின உமதன்புக் கீடாய்
என்ன
நான் செய்திடுவேன்
நரகாக்கினையின்
நின்று மீட்ட
சுத்த
கிருபையை நித்தம் பாடுவேன்
2.எந்தன்
பாவங்கள் பாரச் சுமை போல்
தாங்கக்
கூடாத மா பாரமே
மன்னிக்கும்
தயை பெருத்த என் தேவா
மன்னித்தும்
மறந்து தள்ளினீர்
3.எந்தன்
பாதங்கள் சறுக்கிடும் போது
வலக்கரத்தாலே
தாங்குகின்றீர் மனபாரத்தால்
சோர்ந்திடும்
போது
ஜீவ
வார்த்தையால் தேற்றுகின்றீர்
4.எனக்காக
நீர் யாவும் முடித்தீர்
உமக்காக
நான் என்ன செய்வேன்
எந்தன்
ஜீவனுள்ள நாளெல்லாம் என்
சிலுவை
சுமந்தே வருவேன்