Tamil Song - 81 - Aaththumamey En Muzhu
ஆண்டவரைத்
தொழுதேத்து
இந்நாள்
வரை அன்பு வைத்தாதரித்த - உன்
ஆண்டவரைத்
தொழுதேத்து
1.போற்றிடும்
வானோர் பூதலத்துள்ளோர்
சாற்றுதற்
கரிய தன்மையுள்ள (2)
2.தலைமுறை
தலைமுறை தாங்கும் விநோத
உலக
முன்தோன்றி ஒழியாத (2)
3.தினம்
தினம் உலகில் நீ செய்பலவான
வினை
பொறுத்தருளும் மேலான(2)
4.வாதை
நோய் துன்பம் மாற்றி அனந்த
ஓதரும் தயை செய்துயிர்
தந்த (2)
5.உற்றுனக்
கிரங்கி உரிமை பாராட்டும்
முற்றும்
கிருபையினால் முடிசூட்டும்
6.துதி
மிகுந்தேறத் தோத்திரி தினமே
இதயமே
உள்ளமே என் மனமே (2)
