Tamil Song - 163 - Umakku Makimai tharukirom
உமக்கு மகிமை தருகிறோம்
உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம்(2)
ஆராதனை ஆராதனை (2)
1.தாழ்மையில் அடிமையை
நோக்கிப் பார்த்தீரே
உயர்த்தி மகிழ்ந்தீரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே!
2.வல்லவரே மகிமையாய்
அதிசயம் செய்தீர்
உந்தன் திருநாமம்
பரிசுத்தமானதே!
3.கன்மலையின் வெடிப்பில் வைத்து
கரத்தால் மூடுகிறீர்
என்ன சொல்லிப் பாடுவேன்
என் இதய வேந்தனே!