Tamil Song - 212 - Aachchariyamey Athisayamey
ஆண்டவர்
செயல்கள் ஆதிபக்தரிடம்
1.செங்கடல்
இரண்டாய்ப் பிரிந்துபோக
சொந்த
ஜனங்களைக் கடத்தினாரே
இஸ்ரவேலின்
துதிகளாலே
ஈன எரிகோ வீழ்ந்ததுவே
2.ஏழு
மடங்கு எரி நெருப்பில்
ஏழை
தம் தாசருடன் நடந்தார்
தானியேலைச்
சிங்கக் கெபியில்
தூதன்
துணையால் காத்தனரே
3.பனி மழையை நிறுத்தினாரே
பக்தன்
எலியா தன் வாக்கினாலே
யோசுவாவின்
வார்த்தையாலே
ஏறும்
சூரியன் நின்றதுவே
4.மதிலைத்
தாண்டி சேனைக்குள்பாயும்
மாபெலன்
தேவனிடம் அடைந்தான்
வீழ்த்தினானே
கோலியாத்தை
வீரன்
தாவீது கல் எறிந்தே
5.நம்
முற்பிதாக்கள் நம்பின தேவன்
நேற்றும்
இன்றும்என்றும்மாறிடாரே
தம்மை
நோக்கி வேண்டும்
போது
தாங்கி நம்மை ஆதரிப்பார்
