Tamil Song - 304 - Yesu Kiristhuvin Nal Seedaraaguvom
இயேசுகிறிஸ்துவின்
நல்சீடராகுவோம்
விசுவாசத்தில்
முன் நடப்போம்
இனி
எல்லாருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய்
எந்நாளும் உழைத்திடுவோம்
நம்
இயேசு ராஜாவே இதோ வேகம்
வாராரே
அதி
வேகமாய் செயல்படுவோம்
1.மனிதர்யாரிடமும்பாசம்காட்டுவோம்
இயேசுமந்தைக்குள்அழைத்திடுவோம்
அதி
உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜபாதையைசெம்மையாக்குவோம்
2.சாத்தானின்
சதிகளைத் தகர்த்திடுவோம்
இனி
இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
இந்தப்
பார் முழுதும் இயேசுநாமத்தையே
எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம்
3.ஆவிஆத்துமாதேகம்அவர்பணிக்கே
இனி
நான் அல்ல அவரே எல்லாம்
என முடிவு செய்தோம் அதில்
நிலைத்திருப்போம்
அவர்
நாளினில் மகிழ்ந்திடுவோம்