Tamil Song - 338 - Aaviyaanavarey Anpin
ஆவியானவரே
அன்பின் ஆவியானவரே
இப்போ
வாரும் இறங்கி வாரும்
எங்கள்
மத்தியிலே
1.உளையான
சேற்றினின்று
தூக்கி எடுத்தவரே
பாவம்
கழுவி தூய்மையாக்கும்
இந்த
வேளையிலே
2.சீனாய்
மலையினிலே
இறங்கி
வந்தவரே
ஆத்ம
தாகம் தீர்க்க
வாரும்
இந்த
வேளையிலே
3.நேசரின்
மார்பினிலே
இனிதாய்
சாய்ந்திடவே
ஏக்கமுற்றேன்
விரும்பி வந்தேன்
இந்த
வேளையிலே
4.ஆவியின்
வரங்களினால்
என்னையும்
நிரப்பிடுமே எழுந்து
ஜொலிக்க
எண்ணெய் ஊற்றும்
இந்த
வேளையிலே