Tamil Song - 357 - Uttrapada vendum unnathaththin aavi
ஊற்றப்பட
வேண்டும் உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க
வேண்டும் எம்மை தேவா முன்
மாரியாக அன்று
பொழிந்திட்ட
ஆவியை
பின்
மாரியாக இன்று பொழிந்திடுமே
எண்ணெய்
அபிஷேகமே என் தலையை நனைக்க
ஆவியில்
நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்
நீச்சல்
ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழ
அக்கினி
அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்ந்திடும்
1.தேவ
மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
போதிக்கும்
ஆவியாலே நிறைத்திடுமே - 2
2.ஒரு
மனதோடு கூடி வந்துள்ளோம்
தேவ
புத்திரர் என முத்திரை போடும்
3.ஜெப
வேண்டுதலிலே தரித்திருப்போம்
ஜெகத்திலே
சாட்சியாக எம்மை நிறுத்தும்!