Tamil Song - 385 - Yaar Vendum Naathaa | யார் வேண்டும் நாதா நீரல்லவோ Lyrics

யார் வேண்டும் நாதா நீரல்லவோ
யார் வேண்டும் நாதா நீரல்லவோ எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ பாழாகும் லோகம் வேண்டாமையா வீணான ஆசை வெறுத்தேனையா 1.உம்மோடல்லாது வாழ்வது ஏன் உம் உள்ளம் மகியாஹாது வாழ்வது ஏன் மனம் போன வாழ்க்கை வாழ்க்கையல்ல வாழ்வேனே என்றும் உமக்காக நான் 2.சிற்றின்ப மோகம் சீக்கிரம் போகும் பேரின்ப நாத நீர் போதாதா யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ எங்கே நான் போவேன் உம்மையல்லால் 3.உலகத்தின் செல்வம் நிலையாகுமோ பேர் புகழ் கல்வி அழியாததோ பின் ஏன் நீர் கேட்டீர் இக் கேள்வியை பதில் என்ன சொல்வேன் நீரே போதும் 4.உற்றாரின் பாசம் உடன் வருமோ மற்றோரின் நேசம் மாறாததோ உம்மன்பின் நேசத்திற் கிணையாகுமோ ஏனையா கேட்டீர் இக் கேள்வியை 5.என்னைத் தள்ளினால் எங்கே போவேன் அடைக்கலம் ஏது உம்மையல்லால் கல்வாரி இன்றி கதியில்லையே கர்த்தர் பாதம் சரணடைந்தேன்
Tanglish Lyrics
Yaar Vendum Naadhaa Neerallavo Edhu Vendum Naadhaa Um Anballavo Paazhaagum Logam Vendaamaiyaa Veenaana Aasai Veruththeenaiyaa 1. Ummodallaadhu Vaazhvadhu Yen Um Ullam Magizhaadhu Vaazhvadhu Yen Manam Pona Vaazhkkai Vaazhkkaiyalla Vaazhvene Endrum Umakkaaga Naan 2. Sitrinba Mogam Seekkiram Pogum Perinba Naadhaa Neer Podhaadhaa Yaar Vendum Endru Yen Ketteero Enge Naan Poven Ummaiyallaal 3. Ulagaththin Selvam Nilaiyaagumo Per Pugazh Kalvi Aziyaadhadho Pin Yen Neer Ketteer Ik Kelviyai Badhil Enna Solven Neere Podhum 4. Utraarin Paasam Udan Varumo Matrorin Nesam Maaraadhadho Um Anbin Nesaththirk Kinaiyaagumo Yenaiyaa Ketteer Ik Kelviyai 5. Ennaith Thallinaal Enge Poven Adaikkalam Edhu Ummaiyallaal Kalvaari Indri Gadhiyillaiye Karththar Paadham Saranadaindhen