Tamil Song - 425 - Yesu Endrathume
இயேசு என்றதுமே எனக்கோர்,
இன்பம் பிறக்குதம்மா!
காசியினில் அவர் போல்,
எவரையும் கண்டதுமில்லையம்மா
1. பேசத் தொடங்கினாலோ
பேச்செல்லாம் பேரின்பம் கொட்டுதம்மா!
பார்க்கத் தொடங்கினாலோ
பார்வையெல்லாம் பாவியென்மேலேயம்மா
2. குஷ்டரோகியவனை
கையினால் கூசாமல் தொட்டாரம்மா!
கஷ்டப்படுவோரை கண்டதும்
கண்ணீர் வடித்தாரம்மா!
3. சிலுவை மரத்தினில்
இரத்தத்தை சிந்தி மரித்தாரம்மா!
உலகை மீட்டிடவே ஆண்டவர்
அன்பாக வந்தாரம்மா! அவனியில் மாண்டாரம்மா!
4. கல்லறை விட்டெழுந்தே - உலகில்
காட்சியளித்தாரம்மா
வல்ல சுத்தாவியினைத்
தரவே வானில் எழுந்தாரம்மா