Tamil Song - 447 - Makimaim Mel makimai | மகிமை மேல் மகிமை அடைந்திடுவேன்

மகிமை மேல் மகிமை

மகிமை மேல் மகிமை அடைந்திடுவேன் மறுரூபமாவேன் மனமதிலே மகிழ்ந்திடவே தரிசிக்கவே பரன் முகமே 1.உந்தன் பாதம் என்னை பலியாய் உண்மை மனதுடன் ஒப்படைத்தேன் ஏற்றுக் கொண்டருளும் தேவ பெலன் விளங்கும் தேற்றி உயிர்ப்பித்திடும் தம் ஆவியினால் – மகிமை 2.தேவ சாயல் தேவ சமூகம் தேவ பிள்ளைகள் அடையும் பாக்கியம் எந்தன் வாஞ்சையிதே என்று சேர்ந்திடுவேன் என்னை நிரப்பிடுமே தம் ஆவியினால் – மகிமை 3.ஜீவ ஜாலமே பொங்கி வருதே ஜீவ ஊற்றுகள் திறந்தனவே தம் கரம் பிடித்தேன் அங்கு வழி நடத்தும் தாகம் தீர்த்திடுவேன் தம் ஆவியினால் – மகிமை 4.பாதம் ஒன்றே போதும் என்றேன் பேசும் ஆண்டவர் தொனியும் கேட்டேன் இன்ப வாக்குகளே எந்தன் போஜனமே என்னை பெலப்படுத்தும் தம் ஆவியினால் – மகிமை 5.திவ்ய குணங்கள் நாடி ஜெபித்தேன் தூய வாழ்க்கையின் தேவை அதுவே தேவ சேவையிலே பாடு சகித்திடவே தாரும் பொறுமை பெலன் தம் ஆவியினால் – மகிமை 6.ஆவி, ஆத்மா தேகம் முழுவதும் அன்பர் இயேசுவின் சொந்தமாமே பூரணம் அருளும் ஆயத்தப்படுத்தும் பாடிப்பரந்திடுவேன் – தம் ஆவியினால் – மகிமை
Magimai mel magimai adaindhiduven Maruroobamaaven manamadhile Magizhndhidave dharisikkave paran mugame 1 Undhan paadham ennai baliyaai Unmai manadhudan oppadaithen Etruk kondarulum deva belan vilangum Thetri uyirppithidum tham aaviyinaal – Magimai 2 Deva saayal deva samoogam Deva pillaigal adaiyum baakiyam Endhan vaanchaiyidhe endru serndhiduven Ennai nirappidume tham aaviyinaal – Magimai 3 Jeeva jaalame pongi varudhe Jeeva ootrugal thirandhanave Tham karam pidithen angu vazhi nadathum Thaagam theerthiduven tham aaviyinaal – Magimai 4 Paadham ondre podhum endren Pesum aandavar thoniyum ketten Inba vaakkugale endhan bojaname Ennai belappaduthum tham aaviyinaal – Magimai 5 Divya gunangal naadi jebithen Thooya vaazhkaiyin thevai adhuve Deva sevaiyile paadu sagithidave Thaarum porumai belan tham aaviyinaal – Magimai 6 Aavi, aathma dhegam muzhuvadhum Anbar Yesuvin sondhamame Pooranam arulum aayathappaduthum Paadip parandhiduven tham aaviyinaal – Magimai