Tamil Song - 473 - Kanaththirkuriya Paaththiramaa
கனத்திற்குரிய பாத்திரமா நாம்
கனவீனத்தின் பாத்திரமா (2)
நம்மை கர்த்தரிடம் தந்திடுவோம்
உபயோகத்திற்காய் கொடுத்திடுவோம்
1. பொன்னும் வெள்ளியுமான
பாத்திரங்களாம்
மரமும் மண்ணுமான
பாத்திரங்களாம்
கனமுள்ளவை கனமற்றவை
இருவகையானதாம்
எஜமானின் இருவகைப்
பாத்திரங்களாம் (2)
2. சுத்தமான பாத்திரம் கனமுள்ளதே
சுத்தமற்ற பாத்திரம் கனமற்றதே
சுத்தமா அசுத்தமா நம்மை
சோதித்தறிந்திடுவோம்
சுதனுக்காய்
பரிசுத்தம்
செய்திடுவோம் (2)
3. சுத்திகரிக்கப்பட்ட பாத்திரங்களாய்
பரிசுத்தமாக்கப்பட்ட
பாத்திரங்களாய்
நம்மை ஒப்புக் கொடுத்திடுவோம்
தேவகரத்தினில்
எஜமானின் உபயோகமாகிடுவோம்