Tamil Song - 511 - Um Naamam Paadanume Raaja
உம் நாமம் பாடணுமே ராஜா
உம்மையே துதிக்கணுமே
உம்மைப்போல் மாறணுமே
1. ஒவ்வொரு நாளும் உம் திருபாதம்
ஓடி வர வேணுமே
உமது வசனம் தியானம் செய்து
உமக்காய்
வாழணுமே
2. இரவும் பகலும் ஆவியிலே நான்
நிரம்பி ஜெபிக்கணுமே
ஜீவ நதியாய்
பாய்ந்து பிறரை
வாழ வைக்கணுமே
3. சுயத்தை வெறுத்து
சிலுவை எடுத்து
சுமந்து வர வேணுமே
சிலுவை அன்பை எடுத்துச் சொல்லி
சீடர் ஆக்கணுமே