Tamil Song - 573 - Yesuve Um Naamaththinaal
இயேசுவே உம் நாமத்தினால்
இன்பமுண்டு யாவருக்கும்
நன்றியுள்ள இதயத்துடன்
கூடினோம் இந்நன்னாளிலே
எங்கள் தேவனே எங்கள் ராஜனே
என்றும் உம்மையே சேவிப்போம்
நன்றியுள்ள சாட்சியாக உமக்கென்றும் ஜீவிப்போம்
2.நிலையில்லா இவ்வுலகில்
நெறி தவறி அலைந்தோம்
நின்னொளி பிரகாசித்திட
நீங்கா ஜீவன் கண்டடைந்தோம்
3.பொன்னை நாடி
மண்ணையடைந்தோம்
புகழ்தேடி ஏமாற்றம் கொண்டோம்!
விண்ணை நோக்கி
ஜெயமே பெற்றோம் இயேசுவின்
தரிசனத்தால்!!