Tamil Song - 589 -Aanigal Paaintha
கரங்களை விரித்தே ஆவலாய்
இயேசுன்னை அழைக்கிறாரே
1. பார் திருமேனி வாரடியேற்றவர்
பாரச் சிலுவைதனைச்
சுமந்து சென்றனரே
பாவமும் சாபமும் சுமந்தாரே
உனக்காடய்
பயமின்றி வந்திடுவாய்
2. மயக்கிடுமோ இன்னும் மாயையின்
இன்பம் நயத்தாலே
உந்தனை நாசமாக்கிடுமே
உணர்ந்திதையுடனே உன்னதரண்டை
சரண் புகுவாய்
இத்தருணம்
3. கிருபையின் வாசல்
அடைத்திடு முன்னே
மரணத்தின் சாயலில்
இணைந்திடுவாயே
உருவாக்கியே புதுசிருஷ்டியில் வளர
கிருபையும் அளித்திடுவார்
4. இயேசுவல்லாது இரட்சிப்புத்
தரவோர் இரட்சகர் வேறு
இகமதிலுண்டோ
அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே
அவரேயுன் நாயகரே
