Tamil Song - 596 - Yesuve Kalvaariyil Ennai
இயேசுவே கல்வாரியில் என்னை
வைத்துக்கொள்ளும்
பாவம் போக்கும் இரத்தமாம்
திவ்விய ஊற்றைக் காட்டும்
மீட்பரே மீட்பரே எந்தன் மேன்மை
நீரே உம்மிவ் வாழுமளவும்
நன்மை செய்குவீரே!
2.பாவியேன் கல்வாரியில்
இரட்சிப்பைப் பெற்றேனே
ஞானஜோதி தோன்றவும்
கண்டு பூரித்தேனே
3.இரட்சகா கல்வாரியின்
காட்சி கண்டோனாக
பக்தியோடு ஜீவிக்க
என்னை ஆள்வீராக
4.இன்னமும் கல்வாரியில்
ஆவலாய் நிற்பேனே
பின்பு மோட்ச லோகத்தில்
என்றும் வாழுவேனே