Tamil Song - 604 - Kalvaari Anpinai
கல்வாரி அன்பினைக் காணவில்லை
கல்லான உள்ளத்தின் ஆழமதில்
நித்தியம் இழந்து நின் அன்பைமறந்து
நித்தம் மரிக்குதையோ
1. கல்வாரி அன்பினைக்கண்ட உள்ளம்
கதறாமல் காலம் கழித்திடாதே
பெரியவன் சிறியவன்
நானென்ற கம்பாவம்
காற்றாய்
பறந்திடதோ
2. கபடும் விரோதமும் கர்வகுணமும்
கடையேனை விட்டு அகன்றிடட்டும்
கதறாத கல்நெஞ்சம்
பதறாத என்மனம்
கர்த்தனே வேண்டாமையா
3. நித்தம் நித்தம் நித்தியமாய்
இத்தரை மாந்தர்கள் மாளும் போது
அத்தனே உந்தனின்
அன்புள்ளம் தாங்குமோ
எந்தனுக்கேனில்லையோ
4. பாழும் உலகத்தின் பாசம் வேண்டாம்
வீழும் பேர் புகழும் செல்வம்
வேண்டாம் கல்வாரி நாதனே
கதறும் என்வேண்டுதல்
கல்வாரி அன்பே போதும்
5. உடல் பொருள் ஆவியும் உந்தனுக்கே
உம்மையன்றி உலகில்
வேறாசையில்லை
உம்பாதம் விழுந்து உம் கண்ணீர்
துடைத்து உம்மண்டை வந்திடுவேன்!