Tamil Song - 609 - Kalvaari Maamalaimel
கல்வாரி மாமலைமேல்
கைகால்கள் ஆணிகளால்
கடாவப் பட்டவராய் கர்த்தன்
தொங்கக் கண்டேன்
குருசின் வேதனையும்
சிரசின் முள்முடியும்
குருதி சிந்துவதும்
உருக்கிற்றென் மனதை
2. அஞ்சாதே என் மனமே
மிஞ்சும் உன் பாவமதால்
நெஞ்சம் கலங்காதே
தஞ்சம் நானே உனக்கு
எனக்கேன் இப்பாடு
உனக்காகத்தானே
ஈனக்கோலம் அடைந்தேன்
உனைரட்சித்தேன் என்றார்
3. கர்த்தரின் சத்தமதை
சத்தியமென்று நம்பி
பக்தியுடன் விழுந்து
முத்தம் செய்தேன் அவரை
என்பாவம் நீங்கியதே
எக்கேடும் ஓடியதே
சந்தேகம் மாறியதே
சந்தோஷம் பொங்கியதே