Tamil Song - 612 - Aasirvathiyum Karththare
மிகவே
நேசா உதியும் சுத்தரே நித்தம்
மகிழவே
வீசிரோ வான ஜோதி கதிரிங்கே
மேசியா எம் மணவாளனே
ஆசாரியராம் வான் ராஜனே
ஆசீர்வதித்திடும்
1. இம் மணமக்களோடென்றும்
என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின்சென்றும்
ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும்
வல்லவரே
இன்பத்தோடன் பாக்கியச் சூட்சமே
உம்மிலே தங்கித் தரிக்க
ஊக்கமருளுமே
2. ஒற்றுமையாக்கும் இவரை
ஊடாக நீர் நின்றே
பற்றோடும் மீது சாய்ந்துமே
பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும்
இவர் நெஞ்சத்திலே
வீற்றாளும் நீர் ஏக ராஜனாம்
உற்றவான்¬ராயர் சேயர்க்கே
ஒப்பாய் - ஒழுகவே
3. பூதல ஆசீர்வாதத்தால்
பூரணமாகவே
ஆதரித்தாளும் கர்த்தரே
ஆசீர்வதித்திடும்
மா திரளாக இவர் சந்ததியார்
வந்துதித்தும்மை பிரஸ்தாபிக்க
ஆ தேவகிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன்!
