Tamil Song - 626 - Aathaaram Neerthaan
என்துரையே, ஆதாரம் நீர்தான் ஐயா
சூதாம் உலகில் நான்
தீதால் மயங்கையில்
1. மாதா பிதாவெனைத்
தீதாய்
மதிக்கையில்
மற்றோர்க்குப் பற்றேதையா,
எளியன் மேல் மற்றோர்க்குப்
பற்றேதேயா, எளியனுக்கு
2. நாம் நாம் துணையென
நயந்துரை சொன்னவர்
நட்டாற்றில் விட்டாரையா,
தனியனை நட்டாற்றில்
விட்டாரையா, தனியனுக்கு
3. கற்றோர் பெருமையே,
மற்றோர் அருமையே
வற்றாக்கிருபை நதியே என்பதியே
வற்றாக்கிருபை நதியே என்பதியே
4. சோதனையடர்ந்து
வேதனை தொடர்ந்து
துக்கம் மிகுவேளையில்
என் சுகிர்தமே
துக்கம் மிகுவேளையில்
உன் தாசனுக்கு
