Tamil Song - 634 - Yesu Raajaa Munne Selkinraar
இயேசு ராஜா முன்னே செல்கின்றார்
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே (2)
1. அல்லேலூயா துதி மகிமை -
என்றும்
அல்லேலூயா துதி மகிமை
இயேசுராஜா எங்கள் ராஜா (2)
என்றும் போற்றிடுவோம்
2. துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள்
தேடி வந்தாலும்
பயமும் இல்லை கலக்கம் இல்லை
(2)
கர்த்தர் நம்முடனே
3. யோர்தானின் வெள்ளம்
வந்தாலும்
எரிகோ கோட்டை
முன்னே வந்தாலும்
பயமும் இல்லை கலக்கம் இல்லை
(2) மீட்பர் நம்முடனே!