Devanukkey makimai Tamil Songs Lyrics


தேவனுக்கே மகிமை
தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே
தினம் உமக்கே மகிமை
என்னை தேடி வந்து மீட்டவரே
தினம் உமக்கே மகிமை-(2)

ஐயா வாழ்க வாழ்க உம்நாமம் வாழ்க


1.உன்ன தத்தில் தேவனுக்கே மகிமை
உண்டாகட்டும் –(2)
இந்தப் பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் – ஐயா


2.செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம் (2)
இந்தப் புவிதனில் உம் விருப்பம்
பூரணமாகட்டுமே – ஐயா

3. எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே – (2)
எங்கள் ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே – ஐயா
4. தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும் – (2)

இன்று பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே – ஐயா