Tamil Song - 19 - Nam Devan Anbullavar

Nam Devan Anbullavar 

நம் தேவன் அன்புள்ளவர்
நம் தேவன் பரிசுத்தர்
நம் தேவன் நீதிபரர்,
நமக்காய் ஜீவன் தந்த
இயேசு அவரே  

1.நன்மை ஏதும் ஒன்றும் இல்லையே
என்ற போதும் நம்மை நேசித்தாரே
ஆ.. ஆ அந்த அன்பில் மகிழ்வோம் 
அன்பரின் பாதம் பணிவோம்  -2  

2.அத்திமரம் துளிர் விடாமற் போனாலும்
திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும்
ஆ.. ஆ அவர் காயம் நோக்குவோம்
அதுவே என்றும் போதுமே  -2  

3.வான மீதில் ஏசு இறங்கி வருவார்
தேவ தூதர் போல மகிமை வாருமே
ஆ.. ஆ எங்கள் தேவா வாருமே
அழைத்து வானில் செல்லுமே  -2  

4.அல்லேலூயா கீதம் நாம் என்றும் பாடுவோம்
ஆண்டவரோடென்றும் நாம் ஆளுகை செய்வோம்
ஆ அந்த நாள் நெருங்குதே நினைத்தால் நெருங்குதே

 நினைத்தால் நெஞ்சம் பொங்குதே  -2