Tamil Song - 47 - Naamathu Yesu Kiristhuvin
நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்
நானிலமெங்கும் ஓங்கிடவே
புனிதமான பரிசுத்த வாழ்வை
மனிதராம் எமக்களித்தார்
தேவ கிருபை என்றும் பெருக தேவனை
ஸ்தோத்தரிப்போம் பாவ இருள் அகல
தேவ ஒளி அடைந்தோம்
2.அவரை நோக்கிக் கூப்பிடும்
வேளை அறிவிப்பாரே அற்புதங்கள்
எனக் கெட்டாத அறிந்திடலாகா
எத்தனையோ பதிலளித்தார்
3.பதறிப்போன பாவிகளாக
சிதறி எங்குமே அலைந்தோம்
அவரை நாம் தெரிந்தறியோமே
அவர் நம்மைத் தெரிந்தெடுத்தார்
4.பலத்த ஜாதி ஆயிரமாக
படர்ந்துஓங்கி நாம் வளர
எளிமையும் சிறுமையுமான
எமக்கவர் அருள் புரிவார்
5.பரமனேசு வந்திடும் போது
பறந்து நாமும் சென்றிடுவோம்
பரமனோடு நீடுழி வாழும்
பரம பாக்கியம் பெறுவோம்