Tamil Song - 50 - Mahimai Umakantro
மகிமை உமக்கன்றோ மாட்சிமை
உமக்கன்றோ துதியும் புகழும் ஸ்தோத்திரமும்
தூயவர் உமக்கன்றோ
ஆராதனை ஆராதனை - என்
அன்பர் இயேசுவுக்கே
1.விலையேறப் பெற்ற
உம் இரத்தத்தால் விடுதலை கொடுத்தீர்
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர்
2.வழிகாட்டும் தீபம் துணையானீரே
தேற்றும் தெய்வமே அன்பால் பெலத்தால்
அனல் மூட்டும் ஐயா
அபிஷேக நாதரே
3.எப்போதும் இருக்கின்ற
இனிமேலும் வருகின்ற எங்கள் இராஜாவே
உம் நாமம் வாழ்க உம் அரசு வருக
உம் சித்தம் நிறைவேறுக