Tamil Song - 111 - Vanthanam Vanthanamey
வந்தனம்
வந்தனமே! தேவதுந்துமி கொண்டிதமே - இது
வரையில்
எமையே வளமாய்க் காத்த எம்துரையே மிகத்
தந்தனம்
1.சந்ததஞ்
சந்ததமே எங்கள் தகு நன்றிக்
கடையாளமே - நாங்கள்
தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயை
கூர் சுரர்பதியே
2.சருவ
வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே
- எங்கள்
சாமி
பணிவாய் நேமித் துதி புகழ்
தந்தனமே நிதமே
3.சருவ
வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே
சத்ய
சருவேசுரனே கிருபாகரனே யுன் சருவத்துக்குந் துதியே!
4.உன்தன்
சருவ ஞானமும் எங்கள் உள்ளிந்திரியம்
யாவையும் பார்த்தால்
ஒப்பே
தருங் காவலே உன்னருளுக்கோ தரும்
புகழ் துதி துதியே.
5.மாறாப்பூரணனே
எல்லா வருடங்களிலும் எத்தனை - உன்தன்
வாக்குத்
தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே!