Tamil Song - 241 - Siluvaiyin vazhiyil anudhinam | சிலுவையில் வழியில் அனுதினம் அடியான் Lyrics
சிலுவையில் வழியில் அனுதினம் அடியான்
சிலுவையில் வழியில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப் பாரிடுவேன் – ஆ ஆ
சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில் – சிலுவையில்
பாவப் பாரச்சுமையதால் சோர்ந்து
தளர்ந்தென் ஜீவியமே ஆ ஆ
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகம்
ஏகுவேன் பறந்தே வேகம் – சிலுவையில்
எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்
ஏசுவை சார்ந்து நிற்பேன் – ஆ ஆ
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக் கொண்டால்
அலைமிக மோதிடும் அந்நாள்
ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார் – சிலுவையில்
இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே
இன்னல்கள் மறந்திடுவேன் – ஆ ஆ
திருமறை இன்னிசை நாதம்
தேனிலுமினிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம் – சிலுவையில்
Tanglish Lyrics
Siluvaiyin vazhiyil anudhinam adiyaan
Saayndhilaip paariduven – Aa Aa
Siluvaiyin anbin maraivil
Kirubaiyin iniya nizhalil
Aathuma Nesarin arugil
Adaigiren aarudhal manadhil – Siluvaiyil
Paava paarach sumaiyaal sorndhu
Thalarndhen jeeviyame – Aa Aa
Siluvaiyandai vandhadhinaal
Sirandha sandhosham kandhadhinaal
Ilaipadaiyaadhu melogam
Eguven parandhe vegam – Siluvaiyil
Evvitha kodiya idarukkum anjen
Yesuvai saarnthu nirpen – Aa Aa
Avaniyil viyaakulam vandhaal
Avaraiye naan andik kondaal
Alai miga modhidum annal
Aarudhal alipadhaai sonnaar – Siluvaiyil
Inbam surandhidum thirumozhi kette
Innalkal marandhiduven – Aa Aa
Thirumarai innisai naadham
Thenilum iniya Vedham
Tharum enakkanandha sandhosham
Theerkumen idhayathin dhosham – Siluvaiyil