Tamil Song - 256 - Soornthu Poogathey

சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே போராட
சோர்ந்து போகாதே

கண்டுனை அழைத்த தேவன்
கைவிடுவாரோ – சோர்ந்து

1.வாக்களித்த தேவனை நீ பாடிக் கொண்டாடு
ஊக்கமான ஆவி உன்னைத் தாங்க மன்றாடு – சோர்ந்து

2.துன்பங்கள் தொல்லைகள் உன்னைச் சூழ்ந்து கொண்டாலும்
அன்பர் உன்னைத் தேற்றும் நேரம் ஆனந்தமல்லோ – சோர்ந்து

3.சோதனைகளை ஜெயிப்பேன் பாக்கியவானல்லோ

ஜீவகிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம் – சோர்ந்து