Tamil Song - 344 - Parisuththaavi Engal meethiley | பரிசுத்தாவி எங்கள் மீதிலே

பரிசுத்தாவி எங்கள் மீதிலே
பொழியும் இந்த வேளையிலே
பிரசன்னத்தால் நிரப்பி எம்மை
புது சக்தியை அளித்திடுமே

1. இம்மண்டலம் முழுவதையும்
உம் ஆவியால் நிரப்பி விடும்
அனுப்பியே தாரும் – பரிசுத்த அக்கினி
அந்தகாரத்தை நீக்கிவிடும் – பரிசுத்தாவி

2. தேவ செய்தி அளிக்க விருக்கும்
தேவ பிள்ளையைப் பெலப்படுத்தும்
தேவலோகத்தின் – இரகசியங்களை
தேவா எங்கட்கும் வெளிப்படுத்தும் – பரிசுத்தாவி

3. பேயின் சக்தி தகர்ந்திடவே
நோயின் சாபம் அகற்றிடவே
வல்லமை தாரும் – பெலமும் அருளும்
வரம் தந்தெம்மை அபிஷேகியும் – பரிசுத்தாவி

4. பரலோகத்தின் அதிபதியே
பரலோகத்தின் பல கனிகள்
திறந்தே கொட்டியும் – கிருபை சொரியும்
திருப்திப் படுத்தி அனுப்பும் – பரிசுத்தாவி


<----Tanglish Lyrics ---->

Parisuthaavi engal meedhile
Pozhiyum indha velaiyile
Prasannathaal nirappi emmai
Pudhu sakthiyai alithidume


Immandalam muzhuvadhaiyum
Um aaviyaal nirappi vidum
Anuppiye thaarum – parisutha akkini
Andhakaarathai neekkividum – Parisuthaavi

Deva seidhiya alikka virukkum
Deva pillaiyai belappaduthum
Devalogathin – iragasiyaangalai
Deva engatkum velippaduthum – Parisuthaavi

Peyin sakthi thagarnthidave
Noyin saabam agatrridave
Vallamai thaarum – belamum arulum
Varam thandhemmai abishegiyum – Parisuthaavi

Paralogathin adhibadhiye
Paralogathin pala kanigal
Thirandhe kottiyum – kirubai soriyum
Thirupthippaduthi anuppum – Parisuthaavi