உங்கள் விருப்பமான பாடலை எழுத்தின் மூலம் தேர்ந்தெடுக்கவும்

Tamil Song - 346 - Aaruthalain Deivamey

ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச் சமூகம்
எவ்வளவு இன்பமானது

1.ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி
ஆவமுடன் கதறுகின்றது
உள்ளமும் உடலும் ஒவ்வொருநாளும்
கெம்பீரித்து சத்தமிடுதுஆமென்

2.உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
உண்மையிலே பாக்கியவான்கள்
தூய மனதுடன் துதிப்பார்கள்
துதித்துக் கொண்டிருப்பார்கள்ஆமென்

3. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
உண்மையிலே பாக்கியவான்கள்
ஓடினாலும் களைப்படையார்
நடந்தாலும் சோர்வடையார்ஆமென்

4. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட
உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது
ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்
வாசலில் காத்திருப்பேன்ஆமென்