Tamil Song - 360 - Ennai Nirappum Yesu Deivamey
என்னை
நிரப்பும் இயேசு தெய்வமே
இன்று
நிரப்பும் உந்தன் ஆவியால் (2)
1.தேற்றரவாளன்
பரிசுத்த ஆவி
தேற்றிட
வாருமே ஆற்றலைக்
கொடுத்து
அன்பால் நிரப்பும்
ஆவியே
வாருமே (2)
2.வரங்களைக்
கொடுத்து வாழ்வை
அளிக்கும் வள்ளலே வாருமே
கனிகளால்
நிரப்பிக்காயங்கள்ஆற்றும்
கருணையே
வாருமே (2)
3.கோபங்கள்
போக்கி சுபாவங்கள்
மாற்றும்
சாந்தமே வாருமே!
பாவங்கள்
கழுவிப் பரிசுத்தமாக்கும்
பரமனே
வாருமே (2)