Tamil Song - 390 - Nam Yesu Nallavar
நம் இயேசு நல்லவர் ஒருபோதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்
ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
சாத்தானை மிதிப்போம்
தேசத்தை சுதந்தரிப்போம்
1. அதிசயமானவர்
ஆறுதல் தருகிறார்
சர்வ வல்லவர்
சமாதானம் தருகிறார்
2.கண்ணீரைக் காண்கிறார்
கதறலைக் கேட்கிறார்
வேதனை அறிகிறார்
விடுதலை தருகிறார்
3 எதிர்காலம் நமக்குண்டு
எதற்கும் பயமில்லை
அதிகாரம் கையிலே
ஆளுவோம் தேசத்தை
4.நொறுங்குண்ட நெஞ்சமே
நோக்கிடு இயேசுவை
கூப்பிடு உண்மையாய்
குறையெல்லாம் நீக்குவார்
5.நண்பனே கலங்காதே
நம்பிக்கை இழக்காதே
கண்ணீரைத் துடைப்பவர்
கதவண்டை நிற்கிறார்
6. எத்தனை இழப்புகள்
ஏமாற்றம் தோல்விகள்
கர்த்தரோ மாற்றுவார்
கரம்நீட்டித் தேற்றுவார்