Tamil Song - 418 - Saronin Rojaa Ivar | சாரோனின் ரோஜா இவர்

சாரோனின் ரோஜா இவர்
சாரோனின் ரோஜா இவர் பரிபூரண அழகுள்ளவர் அன்புத் தோழனென்பேன் ஆற்றும் துணைவன் என்பேன் இன்ப நேசரை நான் கண்டேன் காடானாலும் மேடானாலும் கர்த்தரின் பின்னே போகத் துணிந்தேன் 1.சீயோன் வாசியே தளராதே அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர் அன்பின் தேவன் மறக்கமாட்டார் ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார் 2.மலைகள் பெயர்ந்து போகலாம் குன்றுகள் அசைந்து போகலாம் மாறா தேவனின் புதுகிருபை காலை தோறும் நமக்கு உண்டு 3.நேசரை அறியா தேசமுண்டு பாசமாய் செல்ல யார்தானுண்டு தாகமாய் வாடிடும் கர்த்தருக்காய் சிலுவைசுமந்துபின்செல்வோர்யார்?
Tanglish Lyrics
Saaronin Rojaa Ivar Paripoorana Azhagullavar Anbuth Thozhan Enben Aatrum Thunaivan Enben Inba Nesarai Naan Kanden Kaadaanaalum Medaanaalum Karththarin Pinne Pogath Thunindhen 1.Seeyon Vaasiye Thalaraadhe Azaiththavar Endrum Unmaiyullavar Anbin Devan Marakkamaattaar Aarudhal Karangalaal Anaikkindraar 2.Malaigal Peyarndhu Pogalaam Kundrugal Asaindhu Pogalaam Maaraa Devanin Pudhu Kirubai Kaalai Thorum Namakku Undu 3.Nesarai Ariyaa Desam Undu Paasamaai Sella Yaarthaan Undu Thaagamaai Vaadidum Karththarukkaai Siluvai Sumandhu Pin Selvor Yaar?.