Tamil Song - 429 - Paktharudan Paaduven
பக்தருடன் பாடுவேன் -
பரம
சபை முக்தர் குழாம் கூடுவேன்
அன்பால் அணைக்கும் அருள்
நாதன் மார்பினில் இன்பம்
நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான்
1.அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே
அன்பர் என் இன்பர்களும்
பொன்னடிப் பூமானின்
புத்துயிர் பெற்றதால் என்னுடன்
தங்குவார் எண்ணூழி காலமாய்
2.இகழும் பரமும் ஒன்றே இவ்வடியார்க்கு
அகமும் ஆண்டவன் அடியே சுகமும்
நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்
இகலில்லா ரட்சகன்
இன்பப் பொற்பாதமே
3.தாயின் தயவுடையாய்த்
தமியன் நின் சேயன் கண் மூடுகையில்
பாயொளிப் பசும் பொன்னே,
பக்தர் சிந்தாமணி,
தூயா, திருப்பாதத் தரிசனம் தந்தருள்