Tamil Song - 531 - Kangalai Ereduppen
கண்களை ஏறெடுப்பேன்
மாமேரு நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்
விண்மண் உண்டாக்கிய
வித்தகனிடமிருந்து
எண்ணில்லா வொத்தாசை
என்றனுக்கே வரும் - கண்
1. காலைத் தள்ளாடவொட்டார்
உறங்காது காப்பவர்
காலைத் தள்ளாடவொட்டார்
வேளையில்நின் றிஸ்ரவேலரைக்
காப்பவர்
காலையும் மாலையும்
கண்ணுறங்காரவர்!
2. பக்தர் நிழல் அவரே
என்னை ஆதரித்திடும்
பக்தர் நிழல் அவரே
எக்கால நிலைமையில்
எனைச் சேதப்படுத்தாது
அக்கோலம் கொண்டோனை
அக்காலம் புரியவே!
3. எல்லாத் தீமைகட்கும்
என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில்
போக்கு வரத்தையும்
நல்லாத்து மாவையும்
நாடோறும் காப்பவர்!