Tamil Song - 684 - Ullaththil Avar Paal
உள்ளத்தில் அவர் பால்
பேரன்புள்ளோரெல்லாம்
எண்ணத்தில் தெளிவைப்பெறுவீர்
சொல்வதில் கூறுவீர்
வாழ்வதில் சாதிப்பீர்
இயேசு தேடும் நபர் இவரே
1. பரமன் பேரிலே பற்றுக்
கொண்டோரெல்லாம்
எளிதில் புரிவார் அவரின் பாரத்தை
உலகின் பேரிலே
இயேசுவின் அக்கறை
தமதாக்கியவர் வாழுவார் மாளுவார்
உண்மையடியவர் இயேசுவைஅறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்
2. தேசங்கள் தீவுகள் பல பிராந்தியங்கள்
பாவத்தால் நிறைந்து சாபமாகிறதே
திறப்பின் வாசலில் நிற்கத்தக்கதாக
தேவன் தேடும் நபர் நம்மிலே
யார் யாரோ?
3. செல்வம், சீர், சிறப்பு, நற்குடி
பிறப்பு, செல்வாக்கு,
அந்தஸ்து, படோடாபவஸ்து
யாவையும் பெறினும் சாகையில்
என் செய்வீர்?
உலகின் சம்பத்து குப்பை
என்றே சொல்வீர்!
உரையாடலில் சேர்