Tamil Song - 756 - Vallamaiyin Aaviyaanavar
வல்லமையின் ஆவியானவர் -
என்னுள் வந்துவிட்ட
காரணத்தினால்
பொல்லாத சாத்தானை - ஒரு
சொல்லாலே விரட்டி விட்டேன்
1. தூய ஆவி எனக்குள்ளே
பய ஆவி அணுகுவதில்லை
அன்பின் ஆவி எனக்குள்ளே
அகற்றிவிட்டேன் கசப்புகளை
2. கட்டுப்பாட்டின் ஆவியானவர்
என்னை ஆட்கொண்டு
நடத்துகிறார் இஷ்டம்
போல அலைவதில்லை
அவர் சித்தம் செய்து
வாழ்பவன் நான்
3. கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான்
இந்த பாரெங்கும் மணம்
வீசுவேன் மீட்புபெறும்
அனைவருக்கும் - நான்
வாழ்வளிக்கும் வாசனையாவேன்
4. உலகத்திற்கு வெளிச்சம் நான்
நான் வாழுமிடம் ஒளி வீசுவேன்!
உப்பாக பரவிடுவேன் - நான்
எப்போதும் சுவை தருவேன்!
5. தேவனாலே பிறந்தவன் நான்
என்னால் பாவம் செய்ய
முடிவதில்லை கர்த்தரே
பாதுகாக்கிறார்
தீயோன் என்னை தீண்டுவதில்லை