உரைவிடமாய் தெரிந்து கொண்டு - Uraividamaai Therinthu kondu - Tamil Lyrics


உரைவிடமாய் தெரிந்து கொண்டு 
உலவுகிறீர் என் உள்ளத்தில் 
பிள்ளையாக ஏற்றுக்கொண்டு 
பேசுகிறீர் என் உள்ளத்திலே 
அப்பா தகப்பனே உம்மைப் பாடுவேன் 
ஆயுள் நாளெல்லாம் 
உம்மை உயர்த்துவேன் 

1.நீதிக்கும் அநீதிக்கும் சம்மந்தம் 
எது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது 
விட்டுவிட்டேன் பிரிந்து விட்டேன் 
தீட்டானதை தொடமாட்டேன் 


2.உலகப் போக்கோடு உறவு 
எனக்கில்லை சாத்தான் செயல்களோடு 
தொடர்பு எனக்கில்லை 
விட்டுவிட்டேன் பிரிந்து விட்டேன் 
தீட்டானதை தொடமாட்டேன் 


3.தூய்மையாக்குவேன் 
ஆவி ஆத்துமாவை தெய்வ பயத்துடன் 
பூரணப்படுத்துவேன் 
விட்டுவிட்டேன் பிரிந்து விட்டேன் 
தீட்டானதை தொடமாட்டேன் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்