அபிஷேக நாதனே என்னை ஆட்கொள்ள வாருமே | Tamil Christian Song

அபிஷேக நாதனே

என்னை ஆட்கொள்ள வாருமே

சிலுவை நாதனே

என் சிந்தை நிரப்புமே

சீரழிந்த எந்தனை

நீர் சீர்ப்படுத்துமே (2)


1. எரிகோவைத் தகர்த்திட துதி தாரும்

யோர்தானைப் பிளந்திட சால்வை தாரும் (2)

உலகத்தை ஜெயித்திட பெலன் தாரும்

உமக்காக வாழ்ந்திட அருள் தாரும் (2)

-அபிஷேக நாதனே


2. பாவத்தை மேற்கொள்ளும் அபிஷேகம்

பரிசுத்த வாழ்வின் அபிஷேகம் (2)

பெலத்தின்மேல் பெலன்கொள்ளும் அபிஷேகம்

பாதாளம் ஜெயித்திடும் அபிஷேகம் (2)

-அபிஷேக நாதனே




கருத்துரையிடுக

0 கருத்துகள்