பாரங்களால் உன் ஆத்துமாவும் சோர்ந்து போனதோ | Tamil Christian Song
பாரங்களால் உன் ஆத்துமாவும்
பாரங்களால் உன் ஆத்துமாவும் சோர்ந்து போனதோ
கலங்கிடவே வேண்டாம் கர்த்தர் உன் பட்சம்
தம் சுதனைப் போலவே உன்னையும் நேசிக்கின்றாரே
ஏந்தி சுமந்து காப்பார் அவர் வாக்கை நம்பினால்
தேவனால் கூடுமே நற்செய்தி இதுவே
இயேசுவுக்குச் செய்ததை உனக்கும் செய்வார்
மாவல்லமையால் பெலப்படுத்துவார்
தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே
1. பாவம் நிறைந்த உலகிலே நீ வீழ்ச்சியுற்றாலும்
தேவ வார்த்தை சத்தியமே பாவம் மேற்கொள்ளமாட்டாதே
பலமாய் சோதனை வந்தாலும் கிருபை உனக்குண்டே
அனுதினம் இயேசுவைப் போல ஜெயமாய் முன்னேறுவோம்
2. வியாதி வேதனை உன்னையும்
உற்றாரையும் நெருங்குதோ
அறிவார் உன் வலியை அருள்வார் தம் சுகத்தை
உன் தந்தை உன் தேவை சந்திக்க உண்மையுள்ளவர்
இயேசுவைப் போல உன்னையும் கண்மணி போல் காப்பாரே
2. மாபாக்கியம் ஆறுதலாம் இந்த சத்தியம் அறிந்திட்டால்
இயேசுவே கர்த்தராம் மூத்த சகோதரனாம்
அவர் சம்பத்தெல்லாம் உன் சொந்தம்
உன்னை கைவிடவே மாட்டார்
தேவனே உன் பட்சம் தானே உன்னை எதிர்க்க யாருண்டு ?
Tanglish Lyrics
Paarangalaal un aathumaavum sorndhu ponadho
Kalangidave vendam, Karthar un patcham
Tham Sudhanaip polave unnaiyum nesikkindraare
Enthi sumandhu kaappar, Avar vaakkai nambinaal
Chorus
Devanaal koodume narseythi idhuve
Yesuvukkuch seydhadhai unakkum seivaar
Maa vallamaiyaal belappaduthuvaar
Devanaal koodaadhadhu ondrum illaiye
Saranam 1
Paavam niraindha ulagile nee veezhchiyutraalum
Deva Vaarthai saththiyame, paavam merkolla maattaadhe
Balamaai sodhanai vandhaalum kirubai unakkunde
Anudhinam Yesuvaip pola jeyamaai munneruvom
Saranam 2
Viyaadhi vedhanai unnaiyum
Uttraaraiyum nerungudho
Arivaar un valiyai, arulvaar tham sugaththai
Un Thandhai un thevai sandhikka unmaiyullavar
Yesuvaip pola unnaiyum kanmani pol kaappaare
Saranam 3
Maa baakkiyam aarudhalaam indha saththiyam arindhittaal
Yesuve Kartharaam, Mootha Sagodharanaam
Avar sampathellaam un sondham
Unnai kaividave maattaar
Devane un patcham thaane, unnai edhirkka yaarundu?
உரையாடலில் சேர்