உம் தானம் நான் அனுபவித்தேன் | Lyrics Christian Song

உம் தானம் நான் அனுபவித்தேன் 

உம் ஸ்நேகம் நான் ருசித்தறிந்தேன்! (2) 


இயேசுவே என் பிரியமே! 

நீர் போதும் என் வாழ்விலே! (2)

உம் தானம் நான் அனுபவித்தேன்

உம் ஸ்நேகம் நான் ருசித்தறிந்தேன் (2)


இயேசு எனக்கு செய்த

நன்மைகள் நினைக்கும் போது (2)

நன்றி கொண்டென் மனம் 

பாடிடுமே ஸ்தோத்திர கீதத்தின் பல்லவிகள்! (2) - இயேசுவே


⁠இயேசுவே உந்தன் அன்பை

ஏற்காமல் தள்ளினேனே (2)

அன்று நான் அந்நியன் அனாதையல்லோ?! இன்றோ 

உம் சொந்தப் பிள்ளையல்லோ! (2) – இயேசுவே


என் ஜீவனோ சாவானாலும்

உம்மையே பின் செல்லுவேன் (2)

எனக்களித்தீரே நித்திய ஜீவன் 

என்னை மீட்க தம் ஜீவன் தந்தீர்! (2) - இயேசுவே




கருத்துரையிடுக

0 கருத்துகள்