பலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தாலும் அல்ல | Lyrics Tamil Christian Song
பலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தாலும் அல்ல
உம் ஆவியாலே எல்லாம் ஆகிடும்!
அன்பரே உந்தன் பாதம் அண்டி நான் வந்துவிட்டேன்
உம் ஆவியாலே அபிஷேகியும்! (2)
குறைகளை மறைப்பவன் வாழ்வடையான்
அறிக்கையைச் செய்கிறவன் தாழ்வடையான்
பரிசுத்தனாகவே நான் வாழ்ந்திடவே
பாவியாம் என்மேல் இரங்கிடுமே (2) - பலத்தினாலும்
சுயமாக நான் ஒன்றும் செய்யாமலே
நிதானித்து உந்தன் சித்தம் செய்திடவே
சமர்ப்பித்து உந்தன் பாதம் அடிபணிந்தேன்
ஆவியால் மறுரூபம் ஆகிடுவேன் (2) - பலத்தினாலும்
எதிரியாம் பிசாசை நான் வீழ்த்திடவே
நீர் ஜெயித்தது போல ஜெயித்திடவே
வசனத்தில் நிலைத்திடச் செய்திடுமே
உன்னதா! உம்மோடென்னை இணைத்திடுமே! (2) - பலத்தினாலும்
உரையாடலில் சேர்