என்னை படைத்தவரே | Tamil Christian Song

என்னை படைத்தவரே

என்னை படைத்தவரே பெயர் சொல்லி அழைத்தவரே தாயின் கருவினிலே என்னையும் கண்டவரே நீ என்னுடையவன்(ள் ) நீ எனக்கு வேண்டுமென்று மீட்டுக்கு கொள்ளப்பட்டவன் ( ள் ) எங்கோ வாழ்ந்த என்னை நினைத்திட்டீரே வாலிப வயதினிலே அழைத்திட்டீரே உமது பொக்கிஷமாய்த் தெரிந்து கொண்டீர் பரிசுத்தமாய் வாழ பிரித்தெடுத்தீர் தாய் தன் பாலகனை மறந்திட்டாலும் என்னை ஒருபோதும் மறப்பதில்லை உள்ளங்ககையில் என்னை வரைந்து கொண்டீர் உயர்த்தும் காலத்தில் உயர்த்திடுவீர் வைராக்கிய வாஞ்சையாய் இருப்பவரே உலக சிநேகத்தையே வெறுப்பவரே உன் நேசம் எனக்குதான் என்பவரே தீமையை பொறுக்காத தூயவரே நான் உம்முடையவன் (ள்) நான் உமக்கு வேண்டுமென்று மீட்டுக் கொள்ளப்பட்டவன் (ள் )
Ennai padaiththavare Peyar solli azhaiththavare Thaayin karuvinile Ennaiyum kandavare Nee ennudaiyavan (L) Nee enakku vendumendru Meettuk kollappattavan (L) 1. Engo vaazhntha ennai ninaiththitteere Vaaliba vayadhinile azhaiththitteere Umadhu pokkishamaai therindhu kondeer Parisuththamaai vaazha piriththeduththeer 2. Thaai than paalaganai marandhittaalum Ennai orupodhum marappadhillai Ullangaigaiyil ennai varainthu kondeer Uyarththum kaalaththil uyarththiduveer 3. Vairaakkiya vaanchaiyaai iruppavare Ulaga sinegaththaiye veruppavare Un nesam enakkuthaan enbavare Theemaiyai porukkaadha thooyavare Naan ummudaiyavan (L) Naan umakku vendumendru Meettuk kollappattavan (L)