உண்டாக்கினேன் நீ என்னுடையவன் | Undaakkinen Nee Ennudaiyavan
உண்டாக்கினேன் நீ என்னுடையவன்
Tamil Christian Song Lyrics
உண்டாக்கினேன் நீ என்னுடையவன் - உன்னை
உருவாக்கினேன் நீ என்னுடையவன்
மீட்டுக்கொண்டேன் நீ என்னுடையவன் - உனக்குத்
துணை செய்வேன் நான் நீ என்னுடையவன்
மாட்டுக்கு எஜமானைத் தெரியும்
கழுத்தை தன ஆண்டவனை அறியும்
அறியாமல் உணராமல் இருப்பாயோ?
என்னைத் தேடாமல் சேராமல் வாழ்வாயோ?
வருத்தப்பட்டு பாவம் சுமக்கிறாயோ?
வேறுவழியில்லை என நீ தவிக்கிறாயோ?
விடுதலையாக்கும் கர்த்தர் நானே
உனக்காக என் உயிர் தந்த இயேசு நானே!
உன்னைத்தாங்கும் திராட்சை செடி நான்
எண்ணிலே கனிகொடுக்கும் கொடி நீ
எனை விட்டு தூர நீ சென்றிடாதே
என்னையல்லாமல் உன்னால் ஒன்றும் கூடாதே!
உரையாடலில் சேர்