துதிக்கின்றோம் துதி பாடல் பாடி | Tamil Christian Song

துதிக்கின்றோம் துதி பாடல் பாடி 

துயாதி தூயவரை 

கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 

ஸ்தோத்திரம் எந்நாளும் துதி துதியே 


கோட்டையும் குப்பை மேடாகுமே 

துதிக்கின்ற வேளையிலே 

எரிகோ போன்ற சூழ்நிலையும் (2)

மாறிடும் துதிக்கும்போது 


சேனைகள் சிதறியே ஓடிடுமே 

துதிக்கின்ற வேளையிலே 

யோசபாத்தின் சூழ்நிலையும் (2)

மாறிடும் துதிக்கும் போது 


சிறைச்சாலைக்கு கதவுகள் திறந்திடுமே 

துதிக்கின்ற வேளையிலே 

கடுமையான சூழ்நிலையும் (2)

மாறிடும் துதிக்கும்போது 

கருத்துரையிடுக

0 கருத்துகள்