இலக்கை நோக்கித் தொடருகிறேன் Lyrics | Tamil Christian Song

இலக்கை நோக்கித் தொடருகிறேன்
தமிழ் வரிகள்
இலக்கை நோக்கித் தொடருகிறேன்
உம் முகத்தைப் பார்த்து ஓடுகிறேன்
பாரமான யாவையும் தள்ளிவிட்டு ஓடுகிறேன்

நெருக்கங்கள் மத்தியிலும்
நிந்தைகள் மத்தியிலும்
இழப்புகள் மத்தியிலும்
பாடுகள் மத்தியிலும்
நீர் நியமித்த ஓட்டத்தில்
பொறுமையாய் ஓடுவேன் (2)
இயேசுவை நோக்கியே
என் இயேசுவை நோக்கியே - இலக்கை

கலங்கிடும் வேளைகளில் மனம் பதறும் நேரங்களில்
புரியா பாதைகளில்
வழி தெரியா காலங்களில்
நீர் நியமித்த ஓட்டத்தில்
விசுவாசமாய் ஓடுவேன் (2)
இயேசுவை நோக்கியே
என் இயேசுவை நோக்கியே - இலக்கை

உம் பாத சுவடுகள்
எனதாய் மாறனும்
சிலுவையின் மேன்மைக்காய்
என் சுயமே சாகனும்
நீர் நியமித்த ஓட்டத்தில்
தூய்மையாய் ஓடுவேன் (2)
இயேசுவை நோக்கியே
என் இயேசுவை நோக்கியே - இலக்கை
Tanglish Version
Ilakkai nokki thodargiren
Um mugathai paarthu odugiren
Paaramaana yaavaiyum thallivittu odugiren

Nerukkangal maththiyilum
Nindhaigal maththiyilum
Izhappugal maththiyilum
Paadugal maththiyilum
Neer niyamitha oattathil
Porumaiyaai oduven (2)
Yesuvai nokkiye
En Yesuvai nokkiye - ilakkai

Kalangidum velaigalil manam patharum nerangalil
Puriyaa paadhaigalil
Vazhi theriya kaalangalin
Neer niyamitha oattathil
Visuvaasamaai oduven (2)
Yesuvai nokkiye
En Yesuvai nokkiye - ilakkai

Um paadha suvadugal
Enadhaai maaranum
Siluvaiyin menmaikkaai
En suyame saaganum
Neer niyamitha oattathil
Thooymaiyaai oduven (2)
Yesuvai nokkiye
En Yesuvai nokkiye - ilakkai

கருத்துரையிடுக

0 கருத்துகள்