சந்தோஷ கீதம் என்னில் பொங்குதே | Tamil Christian Song
சந்தோஷ கீதம் என்னில் பொங்குதே
1. சந்தோஷ கீதம் என்னில் பொங்குதே
சர்வ வல்ல ஏசு என்னை நேசித்தார்
பெற்றதாம் நன்மைகள் ஒவ்வொன்றாய் எண்ணியே
பேரன்பு பொங்க என்றும் பாடுவேன்
ஆர்ப்பரித்து நான் ஆனந்தங் கொள்வேன்
ஆண்டவர் சமூகம் என்னைத் தேற்றுமே
துன்பங்கள் யாவுமே துரிதமாய் நீங்குதே
இன்ப இயேசு நாமத்தில்
2. பேரின்ப கீதம் என்னில் பொங்குதே
போன நாட்கள் என்னைக் கர்த்தர் தாங்கினார்
சோதனை சூழ்ந்து என் நம்பிக்கை குன்றினும்
சோர்ந்தழியாமல் என்றும் காத்ததால்
3. இரட்சிப்பின் கீதம் என்னில் பொங்குதே
இரட்சகர் என் பாவம் முற்றும் மன்னித்தார்
மானிடர் மாறினும் அன்பை விட்டோடினும்
மாதேவ அன்பில் என்னைக் காத்ததால்
4. ஆனந்த கீதம் என்னில் பொங்குதே
ஆரவாரத்தோடே இயேசு தோன்றுவார்
ஆவலாய் விழித்தே ராவிலும் ஜெபித்தே
ஆயத்தமாய் நான் காத்து நிற்பதால்
5. சீயோனின் கீதம் என்னில் பொங்குதே
சீக்கிரம் வந்தென்னை சேர்த்துக் கொள்வார்
பொன்முடி வேந்தனாம் எந்தை என் இயேசுவின்
பொன் மாளிகை நான் கிட்டிச்சேர்வதால்
Santhosha Geetham Ennil Pongudhe
1. Santhosha Geetham Ennil Pongudhe
Sarva Valla Yesu Ennai Nesiththaar
Petradhaam Nanmaigal Ovvorondraai Enniye
Peranbu Ponga Endrum Paaduven
Aarppariththu Naan Aanandham Kolven
Aandavar Samoogam Ennai Thetrume
Thunbangal Yaavume Thuridhamaai Neengudhe
Inba Yesu Naamaththil
2. Perinba Geetham Ennil Pongudhe
Pona Naatkal Ennaik Karththar Thaanginaar
Sothanai Soozhnthu En Nambikkai Kundrinum
Sorndhazhiyaamal Endrum Kaaththadhaal
3. Ratchippin Geetham Ennil Pongudhe
Ratchagar En Paavam Mutrum Manniththaar
Maanidar Maarinum Anbai Vittodinum
Maadheva Anbil Ennaik Kaaththadhaal
4. Aanandha Geetham Ennil Pongudhe
Aaravaaraththode Yesu Thondruvaar
Aavalaai Vizhiththe Raavilum Jebiththe
Aayaththamaai Naan Kaaththu Nirpadhaal
5. Seeyonin Geetham Ennil Pongudhe
Seekkiram Vandhennai Serththuk Kolvaar
Ponmudi Vendhanaam Endhai En Yesuvin
Pon Maaligai Naan Kittich Servadhaal
உரையாடலில் சேர்