Chediye thiraatchai chediye | செடியே திராட்சைச் செடியே Lyrics
செடியே திராட்சைச் செடியே
செடியே திராட்சைச் செடியே
கொடியாக இணைந்து விட்டேன்
உம் (தகப்பன் )மடிதான் என் வாழ்வு
உம் மகிழ்ச்சிதான் என் உயர்வு
1.கத்திரித்தீரே தயவாய்
கனிகள் கொடுக்கும் கிளையாய்
சுத்தம் செய்தீரே இரத்தத்தால்
சுகந்த வாசனையானேன் – உம் மடிதான்
2.பிதாவின் மகிமை ஒன்றே
பிள்ளை எனது ஏக்கம்
மிகுந்த கனிகள் கொடுப்பேன்
உகந்த சீடனாவேன்
3. ஆயன் சத்தம் கேட்டு
உம் அன்பின் நிலைத்து வாழ்வேன்
பிரிக்க இயலாதையா
பறிக்க முடியாதையா
Chediye thiraatchai chediye
Kodiyaaga inaindhu vitten
Um (Thagappan) madidhaan en vaazhvu
Um magizhchithaan en uyarvu
1. Kaththariththeere dhayavaai
Kanigal kodukkum kilaiyaai
Suththam seidheere iraththaththaal
Sugandha vaasanaiyaanen – Um madidhaan
2. Pidhaavin magimai ondre
Pillai enadhu yekkam
Migundha kanigal koduppen
Ugandha seedanaaven
3. Aayan saththam keettu
Um anbil nilaiththu vaazhven
Pirikka iyalaadhaiyaa
Parikka mudiyaadhaiyaa
உரையாடலில் சேர்