Kondaaduvom Naam Kondaaduvom | கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் Lyrics

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் எக்காளம் ஊதி ஏழு நாட்களும் யேகோவா தேவனைக் கொண்டாடுவோம் பலிகள் செலுத்தி பரிசுத்தர் சமூகத்தில் பாடிக் கொண்டாடுவோம் தீயவன் நடுவில் வருவதில்லை கர்த்தரோ ஜெயம் எடுத்தார் -நம் அகமகிழ்வோம் அகக்களிப்போம் ஆனந்த சத்தமிடுவோம் நல்லவர் கர்த்தர் கிருபையுள்ளவர் என்று நாம் உயர்த்திடுவோம் கர்த்தரின் மகிமை மேகம் போல இறங்கட்டும் இந்நாளிலே அசைக்க முடியா கூடாரமாவோம் அமைதியின் இல்லமாவோம் நோயாளி என்று சொல்வதில்லை குற்றங்கள் நீங்கியதே இஸ்ரவேல் ஜனத்துக்கு தேவன் தந்த பிரமாணம் இதுதானே எகிப்து தேசம் விட்டு புறப்படும்போது கட்டளையாய் கொடுத்தார் பழைய புளித்த மாவை அகற்றி தூக்கி எறிந்திடுவோம் துர்க்குணம் பொல்லாப்பு தவிர்த்திடுவோம் அசுத்தம் அகற்றிடுவோம் எல்லாம் முடிந்தது என்று இரட்சகர் முழங்கினார் சிலுவையிலே சாவுக்கு அதிபதி சாத்தானை சாவாலே வென்றுவிட்டார்
Tanglish Lyrics
Kondaaduvom Naam Kondaaduvom Pandigaigal Naam Kondaaduvom Ekkaalam Oodhi Ezhu Naadgalum Yehovah Devanai Kondaaduvom Baligal Seluththi Parisuththar Samoogaththil Paadik Kondaaduvom Theeyavan Naduvil Varuvadhillai Karththaro Jeyam Eduththaar – Nam Agamagizhvom Agakkalippom Aanandha Saththamiduvom 1. Nallavar Karththar Kirubaiyullavar Endru Naam Uyarththiduvom Karththarin Magimai Megam Pola Irangattum Innaalile 2. Asaikka Mudiyaa Koodaaramaavom Amaidhiyin Illamaavom Noyaali Endru Solvadhillai Kutrangal Neengiyadhe 3. Israavel Janaththukku Devan Thandha Piramaanam Idhudhaane Egipthu Desam Vittu Purappadumbodhu Kattalaiyaai Koduththaar 4. Pazhaiya Puliththa Maavai Agatri Thookki Erindhiduvom Dhurkkunam Pollaappu Thavirththiduvom Asuththam Agatriduvom 5. Ellaam Mudindhadhu Endru Ratchagar Muzhanginaar Siluvaiyile Saavukku Adhipadhi Saaththaanai Saavaale Vendruvittaar