Orunaalum veenagaadhu | ஒருநாளும் வீணாகாது Lyrics

ஒருநாளும் வீணாகாது

Orunaalum veenagaadhu ஒருநாளும் வீணாகாது நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம் ஒரு நாளும் வீணாகது கர்த்தரே உனக்குள்ளே செயலாற்றி மகிழ்கின்றார் அவர் விருப்பம் நீ செய்திட ஆற்றல் தருகின்றார் தொடர்ந்து ஓடு விட்டுவிடாதே பணி செய்வதை நீ நிறுத்திவிடாதே பிடித்துக் கொள் ஜீவவசனம் பிரகாசி கிறிஸ்து இயேசுவுக்காய் நெறி கெட்ட சமுதாயத்தில் நீதானே நட்சத்திரம் அவமானம் நிந்தை எல்லாம் அனுதின உணவு போல பழிச்சொல் எதிர்ப்பு எல்லாம் பெலன் தரும் ஊட்டச்சத்து கண்களை பதித்துவிடு கர்த்தாரம் இயேசுவின் மேல் சிலுவை சுமந்ததனால் சிங்காசனம் அமர்ந்துவிட்டார்
Tanglish Lyrics
Orunaalum veenagaadhu Nee odum ottam, nee seyyum oozhiyam Orunaalum veenagaadhu 1. Karththare unakkulle Seyalaatri magizhkindraar Avar viruppam nee seidhida Aatral tharugindraar Thodarndhu odu vittuvidaadhe Pani seyvadhai nee niruththividaadhe 2. Pidiththuk kol Jeevavasanam Pragaasi Kiristhu Yesuvukkaai Neri ketta samudhaayaththil Needhaane natchaththiram 3. Avamaanam nindhai ellaam Anudhina unavu pola Pazhichchol edhirppu ellaam Belan tharum oottachchathu 4. Kangalai padhiththuvidu Karththaraam Yesuvin mel Siluvai sumandhadhanaal Singaasanam amarndhuvittaar