Tamil Song - 407 - Anbar Anbai Yaaral | அன்பர் அன்பை யாரால்
அன்பர் அன்பை யாரால்
கூறலாம் ஆ! ஆச்சரியம்
அன்பாகவே இருக்கும் என்
நேசர்.
அனுபல்லவி
அன்பின் உயரம் நீளம் அகலம்
ஆழம் அளக்க யாரால் கூடும்
அன்பரின் பேரன்பை இங்கு
அழகாய் கூற யாரால் கூடும்.
பல்லவி
அன்பர் அன்பை
யாரால் கூறலாம் – ஆ! ஆச்சரியம்
அன்பாகவே இருக்கும் என் நேசர்!
அனுபல்லவி
அன்பின் உயரம் நீளம் அகலம்
ஆழம் அளக்க யாரால் கூடும்!
அன்பரின் பேரன்பை இங்கு
அழகாய்க் கூற யாரால் கூடும்! – அன்பர்
சரணங்கள்
1. எல்லா ஜலமும்
மையானாலுமே – அன்பை எழுதிட
எல்லா மரமும் பேனாவானாலுமே
ஆகாயத்தைத் தாளாக்கி
அதிலெல்லாம் எழுதினாலும்
அன்பின் அம்சம் எழதித்
தீ்ர்க்க அன்பர் எங்குதானுண்டு – அன்பர்
2. மாந்தர் மேலே பாய்ந்த
அன்பைத்தான் – ஆழ்ந்து தூதரும்
பார்ப்பதில் பணிந்து குணிகிறார்
பாவி மேலே பாய்ந்த அன்பு
சாவின் கூரை ஒடித்து வென்றது
என்ன அன்பு என்ன நேசம்
மன்னரேசின் மகத்துவநேசம்! – அன்பர்
3. ஏழை என்னில் பாய்ந்த அன்புதான் – ஆ! ஏராளம்
ஏழை என்னால் பகரக் கூடுமோ
அல்லும் பகலும் கூடிப்பாடி
அங்கும் இங்கும் அன்பைக் கூறுவேன்
அன்பின் இன்பம் ருசித்துப் புசித்து
அன்பை மட்டும் எங்கும் கூறுவேன்! – அன்பர்
Tanglish Lyrics
Anbar Anbai Yaaral
Kooralaam Aa! Aachariyam
Anbaagave Irukkum En
Nesar.
Anupallavi
Anbin Uyaram Neelam Agalam
Aazham Alakka Yaaral Koodum
Anbarin Peranbai Ingu
Azhagaai Koora Yaaral Koodum.
Pallavi
Anbar Anbai Yaaral
Kooralaam – Aa! Aachariyam
Anbaagave Irukkum En Nesar!
Anupallavi
Anbin Uyaram Neelam Agalam Aazham
Alakka Yaaral Koodum!
Anbarin Peranbai Ingu Azhagaai
Koora Yaaral Koodum! – Anbar
Saranangal
1. Ellaa Jalamum Maiyaanaalume – Anbai Ezhuthida
Ellaa Maramum Penaavaanaalume
Aagaayathai Thaal aakki Athilellaam Ezhuthinaalum
Anbin Amsham Ezhuthith Theerkka Anbar Enguthaanundu – Anbar
2. Maanthar Mele Paayntha Anbai Thaan – Aazhnthu Thootharum
Paarppathil Paninthu Kunigiraar
Paavi Mele Paayntha Anbu Saavin Koorai Oditthu Vendrathu
Enna Anbu Enna Nesam Mannaraesin Magaththuva Nesam! – Anbar
3. Ezhaai Ennil Paayntha Anbudhaan – Aa! Eraalam
Ezhaai Ennaal Pakarak Koodumo
Allum Pagalum Koodippaadi Angum Ingum Anbaik Kooruven
Anbin Inbam Rusiththup Pusiththu Anbai Mattum Engum Kooruven! – Anbar
உரையாடலில் சேர்